
மட்டக்களப்பில் டெல்டா – மக்கள் அவதானமாக செயற்படுங்கள் – பிராந்திய சுகாதார பணிப்பாளர் மயூரன்

டெல்டா வைரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொற்றும் வீதம் அதிகமாகவும் மரண வீதம் அதிகமாக ஏற்படுத்தக் கூடியது. எனவே மக்கள் அவதானமாக செயற்படுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
நேற்று (28) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.




