யுத்த வலிகளை தாங்கி வாழ்கின்ற மக்கள் தற்போது வரிகளையும் தாங்கி வாழ வேண்டிய நிலை…!சிறிநேசன் ஆதங்கம்..!samugammedia

கிழக்கை மீட்க வந்தவர்கள் இப்போது கிழக்கு எந்த திசையில் இருக்கின்றது என்று தெரியாதபடி  செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய காலகட்டத்தில் பேசு பொருளாக இருக்கின்ற முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த வரியை பற்றி பேசுகின்றார்கள்.

அதைவிட மின்சார சபையை தனியார் மையப்படுத்துகின்ற விடயம் தொடர்பாகவும் பேசுகின்றார்கள்.  எந்த விடயமாக இருந்தாலும் இது ஒரு ஜனநாயக ஆட்சி நடைபெறுகின்ற மக்களாட்சி நடைபெறுகின்ற நாடு என்கின்ற வகையில் மக்களுக்கு சார்பாக அந்த தீர்மானங்கள் இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் இல்லை என்றால் எதிர்வரும் தேர்தல்களில் அவர்கள் தக்க பாடங்களை புகட்டுவார்கள் என்பதில் எதுவிதமான கருத்து வேறுபாடு இல்லை.

அந்த வகையில் பார்க்கின்ற போது வரி என்பது சொல்வார்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஆனால் தை பிறந்ததும் பதினைந்து வீரமாக இருந்த வட் வரி 18 விதமாக அதிகரித்திருக்கின்றது. அத்தோடு இந்த வரியின் பொருட்களின் பட்டியலும் நீண்டு கொண்டு செல்கின்றது.

எனவே மக்கள் இந்த வருடத்தில் ஏதாவது அரசாங்கம் தங்களுக்கு ஒரு வருட ரீதியான பரிசு தரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற போது இப்போது அவர்கள் வரிகளை தந்திருக்கின்றார்கள். ஏற்கனவே இந்த மக்கள் யுத்தத்தால் வலிகளை தாங்கி வாழ்கின்றார்கள் தற்போது வரிகளையும் தாங்கி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.

இந்த இடத்தில் மக்கள் குற்றம் செய்யவில்லை மக்கள் பொருளாதார குற்றம் இழைக்கவில்லை மக்கள் அப்பாவிகளாக வாழுகின்றார்கள் கேட்கின்ற வரிகளை கொடுத்து விட்டு அப்பாவிகளாக வாழ்கின்றார்கள் ஆனால் பொருளாதார குற்றம் இழைத்தவர்கள் யார் என்பதனை நீதிமன்றம் சுட்டிக் காட்டி இருக்கின்றது.

இந்த ராஜபக்ச குடும்பங்கள் பொருளாதார குற்றங்களை இழைத்திருக்கின்றார்கள் என்று சொல்லி எனவே நீதிமன்றத்தின் தீர்ப்பு அவ்வாறு இருக்கின்ற போது இந்த பொருளாதார குற்றம் இழைத்த அவர்களிடம் இருந்து நஷ்ட ஈடுகளை பெற்றுக் கொள்வதன் மூலமாக விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது அதேபோன்று பல்வேறு துறைகள் சார்ந்தும் நஷ்டங்கள் ஏற்பட்டு இருக்கின்றது.

எனவே இந்த இடத்தில் இந்த நஷ்ட ஈடுகளை இந்த பொருளாதார குற்றம் இழைத்தவர்களிடம் இருந்து வரப்படுவதன் மூலமாக மக்களிடம் வரிகளை விதிக்காமல் பெருந்தொகை பணத்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது அது மாத்திரமல்ல இன்னும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் கோத்தபாய ஆட்சிக்கு வருகின்ற போது திரைசேரியில் ஏழு பில்லியன் அமெரிக்க டாலர் இருந்தது ஆனால் வெளிநாட்டு வைப்பகங்களில் எமது தலைவர்கள் இங்கு இருக்கின்ற பணம் படைத்தவர்கள் கிட்டத்தட்ட 56 பில்லியன் டாலர்களை சட்டவிரோதமாக சேர்த்து வைக்கின்றார்கள் என்கின்ற தகவல்களும் கிடைத்திருக்கின்றது.

அதன்படி பார்த்தால் 56 பில்லியன் டாலர் என்பது கிட்டத்தட்ட 5600 கோடி டாலர் அங்கு இருக்கின்றது இந்த 5600 கோடி டொலரும் எங்களுடைய வைப்பகங்களுக்கு வருமாக இருந்தால் நிச்சயமாக இந்த பொருளாதார இடைகளை கடக்க கூடியதாக இருக்கும் அதுமாத்திரமின்றி வரிகளால் மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய சுமைகளை தவிர்க்கக் கூடியதாகவும் இருக்கும்.

இன்னும் ஒரு பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது இலங்கையின் பணக்கார வரிசை என்று ஒன்று கொடுத்திருக்கின்றது அந்த வரிசையிலும் கூட முதலாவது இடத்தில் இருக்கின்றவர்கள் இந்த பொருளாதார குற்றம் முளைத்தவர்களின் பெயர்களை இருக்கின்றது எனவே நீதிமன்றம் தீர்ப்பு சொல்கின்றது பொருளாதார குற்றம் இழைத்திருக்கின்றார்கள் என்று அதே ரீதியில் பொருளாதார ரீதியாக இலங்கையில் முதலாம் நபர்களாக இருக்கின்றவர்களும் இந்த பொருளாதார குற்றங்களைத் அவர்கள் என்பதனை சர்வதேச ரீதியாக ஒரு பட்டியல் படுத்தியிருக்கின்றார்கள் எனவே இலங்கையில் அவ்வாறு முதலாம் தரத்தில் இருக்கின்றவர்கள் பொருளாதார குற்றத்தை நிலைத்திருக்கின்றார்கள் என்றால் அவர்களிடம் இருந்து நிதியை அறவிடுவதன் மூலமாக மக்களுக்கு வரிச் சுமையை கொடுக்காமல் மக்கள் போர் குற்றம் இழைக்கவில்லை பொருளாதார குற்றமும் இழைக்கவில்லை ஆனால் இந்த அரசியல் தலைவர்கள் போர் குற்றம் இழைத்திருக்கின்றார்கள் பொருளாதார குற்றமும் நிலைத்திருக்கின்றார்கள்.

போர் குற்றம் என்பது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றமாக இருப்பதன் படியால் அதனை பெரும்பான்மை சமூகம் பேசாமல் இருக்கின்றது ஆனால் பொருளாதார குற்றம் என்பது எல்லா சமூகங்களையும் பாதித்திருக்கின்றது நீதிமன்றமும் விரல் நீட்டி காட்டி இருக்கின்றது இவர்கள்தான் பொருளாதார குற்றம் இழைத்தவர்கள் என்று அவர்களிடமிருந்து தண்டப் பணத்தை அளவிடுவதன் ஊடாக அல்லது இப்போது போதை வஸ்து காரர்கள் உடைய சொத்துக்களை பணத்தை அரசமயப்படுத்திக் கொண்டிருப்பது போன்று பொருளாதார குற்றம் இழைத்தவர்களுடைய சொத்துக்கள் பணங்கள் இங்கு வருமாக இருந்தால் நிச்சயமாக மக்களை நாங்கள் வரிகளில் மூலமாக வதைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இன்னுமொரு விடயம் பேசப்படுகின்றது மின்சார சபை கட்டணம் என்பதற்கு முன்பாக மின்சார சபையை தனியார் பயன்படுத்துகின்ற ஒரு விடயம் சென்று கொண்டிருக்கின்றது உண்மையில் இந்த விடயத்திலும் நாங்கள் ஆழமாக பார்க்க வேண்டும் எத்தனையோ அரசியல்வாதிகள் அரசியல் தலைவர்கள் இந்த மின்சாரத்தில் அவர்கள் கணக்கு விட்டிருக்கிறார்கள் மின்சார நிலுவை பணம் கட்டப்படாமலும் இருக்கின்றது.

கட்டப்படாமல் இருக்கின்ற மின்சார நிலுவை கட்டணங்களையும் அல்லது வீண்விரயமாக்கப்படுகின்ற அந்த மின்சாரம் அல்லது விம்பறையமாக கொடுக்கப்படுகின்ற போனஸ் கட்டணங்கள் எல்லாம் இருக்கின்றது இவற்றையெல்லாம் சரி செய்கின்றபோது நிச்சயமாக மின்சார சபையினை ஒரு லாபமிட்டும் துறையாக கொண்டு வரக்கூடியதாக இருக்கும் அவை அரசு மயப்படுத்தி இருந்தாலும் சரி தனியார் மயப்படுத்த இருக்கின்றார்கள் என்றாலும் சரி அது மக்களுக்கு பயனுடையதாக அமைய வேண்டும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்ற போது நீங்கள் எதைச் செய்தாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

நீங்கள் இதனை அறிவதாக இருந்தால் பாராளுமன்றத் தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்திப் பாருங்கள் அதில் நிச்சயமாக உங்களுக்கு மக்கள் தீர்ப்பு சொல்வார்கள் நீங்கள் அணுகுகின்ற அரசியல் பொறிமுறை அல்லது பொருளாதாரப் பொறிமுறை மக்கள் சார்பாக இல்லை அரசியல்வாதிகளுக்கும் பொருத்த முதலாளிகளுக்கும் சார்பாக தான் இருக்கின்றது என்கின்ற விடயத்தை சொல்வார்கள் மத்திய தர மக்கள் தொழிலாளர் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அது மாத்திரமில்லாமல் எமது ஆளும் கட்சி அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சர்கள் கூறுவார்கள் மீனுக்கு வாலை காட்டிவிட்டு பாம்புக்கு தலையை காட்டுவது என்று கூறுவார்கள் அதே போன்று பாராளுமன்றத்தில் சென்று வரி அளவிடுகின்ற அந்த சட்டத்திற்கு கையை உயர்த்துகின்றார்கள் இங்கு மக்கள் மத்தியில் வந்து வரியை மக்கள் மீது சுமத்தக்கூடாது அப்பாவி மக்கள் பாவம் என கூறுகின்றார்கள்.

இப்போது வீதிகள் அமைக்கின்ற விடயங்களாக இருக்கின்றோம் இந்த ஒப்பந்த வேலைகளில் இப்போது கிட்டத்தட்ட 15 விதமான தரகு பணம் வாங்கப்படுவதாகவும் பேசப்படுகிறது.

எனவே இவை எல்லாம் எடுத்துப் பார்க்கின்றபோது அரசாங்கம் இதைப் பற்றிச் சொன்னாலும் கூட இங்கு வீண்விரயங்கள் லஞ்சங்கள் ஊழல்கள் தரகுப்பணங்கள் என்பது பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் எனவே இந்த விடயங்களை ஒழுங்குபடுத்தாமல் மக்கள் மீது நீங்கள் வரிகளை சுமத்துவது என்பது மிக மோசமான விடயம்.

மின்சார சபை ஊழியர்களும் தற்போது தெருவில் இறங்கி இருக்கின்றார்கள் தங்களுடைய லாபம் ஈட்டக்கூடிய துறையை ஏன் தனியார் மயப்படுத்த வேண்டும் என்று உண்மையில் அரசாங்கம் தங்கள் பக்கம் இருக்கும் தவறுகளை உன்னை திருத்தி உலகம் திருந்தும் என்று சொல்வார்கள் தங்கள் பக்கம் இருக்கின்ற தவறுகளை நிறைவேற்றிவிட்டு அதன் பின்னர் மற்றவர்களை திருத்த முன் வர வேண்டும்.

எனவே அரசு சார்பாக இருக்கின்ற ஊழல் மோசடிகள் மற்றும் பொருளாதார குற்றம் சம்பந்தமான விடயங்களை முறையாக தீர்த்து வைக்கின்ற போது மக்கள் மீது வரி பழுவை கொடுக்க வராது அதிலும் குறிப்பாக அப்பாவி மக்களை நீங்கள் குற்றம் செய்துவிட்டு அப்பாவி மக்களை வரிகள் மூலமாக தண்டிக்க வேண்டாம் என்று மிகவும் வினயமாக கேட்டுக் கொள்கின்றேன்.

மக்கள் எங்களிடம் பல புகார்களை செய்து கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் தெரியாத்தனமாக செய்த வேலைகளால் அவர்கள் தண்டிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள் குறிப்பாக அன்று நான் பார்த்தேன் கல்வாஞ்சூடி பக்கம் வீதி அமைக்கின்ற போது அந்த வீதி முறையாக அமைக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அங்கு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்ற அல்லது சண்டை போடுகின்ற நிலைமை காணப்படுகின்றது.

உண்மையில் பார்க்கின்றபோது வீதிகள் அமைக்கப்படுவது நல்ல விடயம் வீதி அபிவிருத்தி மிக முக்கியமான விடயம் ஆனால் அந்த வீதி அபிவிருத்தி என்பது முதலில் அந்த விதிக்கு ஒதுக்கப்படுகின்ற நிதிகள் முழுவதும் அந்த வீதிக்குச் செல்ல வேண்டும் அடுத்த கட்டமாக பார்க்க போனால் அந்த வீதிகள் தரமாக போடப்பட வேண்டும்.

இப்போது என்ன நடக்கின்றது என்றால் இந்த தரகு பணம் பெறுவது என்பது கிட்டத்தட்ட சட்டரீதியான விடயம் போன்று மாறிவிட்டது ஐந்து விதமாக இருந்து பத்து வீதமாக இருந்து 15 வீதமாக இருந்து அந்த தரகு பணங்கள் கொடுக்கின்ற செயற்பாடுகள் மிகவும் லாபகரமாக மேற்கொள்ளப்பட்டு கொண்டு வருகின்றது எனவே இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் ராஜாங்க அமைச்சர்களாக இருக்கின்றவர்கள் உயர் அதிகாரிகளாக இருக்கின்றவர்கள் இந்த இடத்தில் மிகவும் பொறுப்பு சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

ஏனென்றால் அரசன் எவ்வழியோ குடியும் அவ்வழியே என்று கூறுவார்கள் மேலுக்கு உள்ளவர்கள் ஊழல் மோசடிகள் லஞ்சங்களை பெற்று வழிகாட்டுகின்ற போது அதன் கீழ் இருக்கின்ற அதிகாரிகளும் அவ்வாறு தூண்டப்படுகின்றார்கள் எனவே நான் சொல்லக்கூடிய விடயம் என்னவென்றால் மக்கள் மத்தியில் இருந்து கிடைக்கப்பெறும் புகார்களின் அடிப்படையில் இந்த வீதிகள் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டது போன்று இருக்கின்றது நான் சேத்துக்குடா பகுதியில் சென்றேன் அப்போதுதான் போடப்பட்ட விதிகளை பார்க்கின்ற போது அந்த வீதிகள் இந்த மழைக்கு கரைந்து விட்டது.

நேற்று வீதி அமைக்கின்றார்கள் இன்னும் ஒரு நான்கு நாட்களில் பார்க்கின்ற போது வீதிகள் கரைந்து செல்கின்றது எனவே இந்த வீதிகள் என்பது நான் நினைக்கின்றேன் அடுத்த தேர்தலுக்கு கூட நின்று பிடிக்க முடியாத நிலைக்கு இந்த வீதிகள் அமைக்கப்படுகின்றது இன்னும் சில இடங்களில் முக்கியத்துவம் இல்லாத வீதிகள்.

உண்மையில் பார்க்கின்ற போது எத்தனையோ மக்கள் குடி வாழுகின்ற வீதிகள் போடப்படாத நிலையில் உள்ளபோது தனிப்பட்டவர்கள் சிலர் தங்களுடைய ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுகின்ற இருக்கின்ற பகுதிகளில் மட்டும் வீதிகளை அமைக்கப்படுகிறது ஏன் என்று கேட்டால் அந்த குறித்த கட்சியை சேர்ந்தவர்கள் அந்த விதிகளை அவர்கள் அமைக்கின்றார்கள்.

எனவே முக்கியத்துவம் இல்லாத இடங்களில் வீதிகள் அமைக்கப்படுகின்ற ஒரு செயல்பாடும் தங்களை சார்ந்தவர்களுக்கு விதிகளை அமைத்துக் கொடுக்கின்ற செயல்பாடும் தங்களை சார்ந்தவர்களுக்கு ஒப்பந்த வேலைகளை கொடுக்கின்ற செயற்பாடுகளும் இப்போது மிகவும் அதிகரித்துக் கொண்டு செல்கின்ற நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது.

அபிவிருத்தி என்பது ஊழல் மோசடி லஞ்சம் இல்லாமல் தரமான அபிவிருத்தியாக இருக்க வேண்டும் மற்றைய அபிவிருத்திகள் எல்லாம் மக்களை ஏமாற்றி பிழைக்கின்ற செயற்பாடாக தான் இருக்கின்றது வாய் சொல்லில் வீரனடி என்கின்ற அடிப்படையில் இவர்கள் செய்கின்றது பாரபட்சமான பக்க சார்பான செயல்பாடாக இருக்கின்றது.

இன்னும் ஒரு விடயம் சுட்டிக்காட்ட வேண்டும் காணிகள் தொடர்பாக இந்த காணிகள் மாவடியோடை, புலுட்டுமானோடை, வெள்ளக்கல் மலை இவ்வாறான இடங்களில் எல்லாம் வகை தொகைகள் இல்லாமல் காடுகள் அழிக்கப்படுகின்றது ஆனால் அதை கேட்பாரும் இல்லை பார்ப்பாரும் இல்லை. அடுத்ததாக கூறப்போனால் மயிலத்த மடு மாதவனை பிரச்சனை இப்போது 100 நாட்களுக்கு மேலாக அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் கிழக்கை மீட்க வந்தவர்கள் இப்போது கிழக்கு எந்த திசையில் இருக்கின்றது என்று தெரியாதபடி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

மயிலத்தமடு மாதவனை என்பது அந்தப் பக்கமாக சிங்கள பெரும்பான்மை மக்கள் ஆயிரக்கணக்கில் ஏக்கர்களை அபகரித்துக் கொண்டு வருகின்றார்கள் உள்பக்கமாக இருந்து இவர்களும் காடுகளை வெட்டிக் கொண்டு செல்கின்றார்கள் மொத்தத்தில் பார்க்கின்ற போது இவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர்களை சன்மானம் கொடுத்து விட்டு அங்கே ஆயிரக்கணக்கான ஏக்கர்களை பிடித்துக் கொண்டு வருகின்ற போது இதுதான் கிழக்கு மீட்பு என்றால் நீங்களும் காணியை பிடியுங்கள் நாங்களும் காணியை பிடிக்கின்றோம் நீங்கள் பிடிக்கின்ற காணிக்கை நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம் நாங்கள் பிடிக்கின்ற காணிகளுக்கு நீங்கள் எதுவும் பேசாமல் இருங்கள் இதுதான் கிழக்கு மாகாண மீட்பு ஒப்பந்தம் என்று நான் நினைக்கின்றேன்.

இப்படிப்பட்டவர்கள் மூன்று ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி விட்டார்கள் இன்னமும் மக்கள் மடையர்களாக மாட்டார்கள் உரிய நேரத்தில் உரிய தீர்ப்பு கொடுத்து இவர்களை அனுப்புவார்கள் கடந்த காலத்தில் இருந்த சில அதிகாரிகள் விட்ட தவறு மாவட்ட செயலாளராக இருந்தவரில் இருந்து ஏறத்தாழ குறிப்பிட்ட சில அதிகாரிகள் செய்த தவறுகள் காரணமாக சிலருக்கு வெற்றிகள் கிடைத்திருக்கின்றது இந்த வெற்றிகள் நியாயமாக செயல்படுகின்ற அதிகாரிகள் வருகின்றபோது இந்த மாயை பிம்பங்கள் எல்லாம் தகர்த்தெறியப்படும்.

இந்த போத்தல் அரசியல் மற்றும் சாப்பாட்டு பார்சல் அரசியல் பண அரசியல் என்பதெல்லாம் மூழ்கடிக்கப்படக்கூடிய விதத்தில் எதிர்காலத்தில் நியாயமான தேர்தல் தீர்ப்புகள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.


Leave a Reply