கொரோனா வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய புதிய இரண்டு மருந்துகள் குறித்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அராங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளங்களில் வௌியிட்டுள்ள பதிவு வருமாறு,
‘அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கான பெடரல் முகவராண்மையினால் தீவிர நிலை வரை கொவிட் நோய் அதிகரிக்கக்கூடிய அபாயமிக்க, சிறிய அளவில் மற்றும் சாதாரண நிலையில் காணப்படுகின்ற நோயாளர்களுக்கு , REGEN-COV என்னும் கம்பனிப் பெயரில் தயாரிக்கப்பட்ட Casirivimab மற்றும் Imdevimab என்னும் மருந்தை அவசரத் தேவைக்காகப் பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள எனது நண்பர்கள் இது வியக்கத்தக்க மருந்தாக கருதுவதாகத் தெரிவித்தனர், இது, நோய் அதிகரிப்பை தடுப்பதன் மூலம் பலரின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளதுடன். இலங்கை அரசாங்கம் சம்பந்தப்பட்ட நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று, இலங்கையர்களின் உயிர்களைக் காப்பாற்ற இந்த உயிர்காக்கும் மருந்தை கொள்வனவு செய்ய முன்வருவது விவேகமானதாக இருக்கும்.