காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பலி…!samugammedia

காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவை, வெலிக்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி இளைஞர் நேற்று (06) இரவு அருகிலிருந்த காட்டுப் பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்  என வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வசந்த பண்டார என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply