கிண்ணியாவில் அரச ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வசிக்கும் அரச ஊழியர்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட சைனா பார்ம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இந்த நடவடிக்கை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி ஆகிய இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இதன்போது சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச். எம். றிஸ்வி கருத்து தெரிவிக்கையில்,

இந்த பிரதேசத்தில் 1300 அரச ஊழியர்களுக்கு முதலாவது அலகு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இன்று இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் பலர் சுகாதார வைத்திய அதிகாரிகளையும் ,சுகாதார பரிசோதகர்களையும்,பொலிஸாரையும் திருப்திபடுத்துவதற்காக சுகாதார விதிமுறையை பேணுகிறார்கள். இது வெறும் போலியான நடவடிக்கையாகும்.முதலில் இந்த நிலை சமூகத்தில் இருந்து மாற வேண்டும். அப்போதுதான் எம்மையும் எமது ஊரையும் பாதுகாக்க முடியும் என்றார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *