
நாளை முதல் கல்முனை வடக்கு MOH பிரிவில் எட்டு இடங்களில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும்!

-கேதீஸ்-
ஏற்கனவே முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி நாளை (30.08.2021) முதல் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எட்டு இடங்களில் பெற்றுக்கnhள்ளலாம் என சுகாதார வைத்திய அதிகாரி கணேஸ்வரன் கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார்.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். சேல்லும்போது தடுப்பூசி செலுத்திய அட்டையையும் எடுத்து செல்லுங்கள்
தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்
கல்முனை இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை
கல்முனை ஆதார வைத்தியசாலை
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை
பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலயம்
பாண்டிருப்பு கலாசார மண்டபம்
சேனைக்குடியிருப்பு சுகாதார நிலையம்
நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயம்
பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயம்