கொரோனா தடுப்பூசி செலுத்தி நிறைவடைந்ததன் பின்னரும், கொரோனா வைரஸ் பரவுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய சுகாதார பிரிவின் விசேட வைத்தியர்கள் குழு ஒன்றை நியமித்து பரிந்துரைகளை முன்வைக்க தயார்படுத்துமாறு சுகாதார தரப்புக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போதே, அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியின் முதலாவது மருந்தளவு (DOSE) சுமார் 100 வீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது மருந்தளவு (DOSE) சுமார் 56 வீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தி முழுமை பெற்றதன் பினனரும், கொவிட் பரவுமாக இருந்தால், அடுத்தகட்டமாக செய்ய வேண்டியது என்னவென்பது தொடர்பில் ஆராயுமாறு சுகாதார தரப்புக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.