திருமலையில் ஆரம்பமான பெரும் போக நெல் அறுவடை…! விவசாயிகள் விடுத்த கோரிக்கை…!samugammedia

தற்போது பெரும்போக நெற்செய்கை இடம் பெற்று வரும் நிலையில் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியின் பத்தினிபுரம் கிராம பகுதியில் இயந்திரம் மூலமான அறுவடை இடம்பெற்று வருகிறது.

இப் பகுதியின் நீர் நாவல் மொட்டை வயல் நிலப் பகுதிகளில் அதிகளவான அறுவடை இடம்பெற்றாலும் விளைச்சல் குறைவு என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இப் பகுதியில் சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகளவான நோய் தாக்கம், பசளை கிருமி நாசினி விலைகளின் அதிகரிப்பு, சீரற்ற கால நிலை காரணமாக விளைச்சளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக நஷ்டத்தை எதிர் நோக்கியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். ஒரு நெல் மூடை 6000 ரூபா வரை செல்கிறது.

ஒரு ஏக்கருக்கு 10 தொடக்கம் 12 வரை மூடைகளே கிடைக்கப் பெறுவதுடன் வெட்டு கூலிக்கு ஏக்கருக்கு 15000 ரூபா வரை செல்கிறது இப்படி போக விலைச்சலில் எவ்வித இலாபமும் இல்லை எனவும் கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாளும் வெள்ள நீர் வேளாண்மை செய்கையை பாதித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர். 

எனவே விவசாயிகளாகிய எங்களுக்கு நஷ்ட ஈட்டை பெற்றுத் தருமாறு உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *