யாழில் இடம்பெற்ற பட்டிப் பொங்கலும் கோமாதா உற்சவமும்…!samugammedia

பசுக்கள், இடபங்களின் பாதுகாப்பு இணையம் மற்றும் வர்த்தக  அமைப்புக்களின்  இணைந்த ஏற்பாட்டில் சிறப்புமிக்க பட்டிப் பொங்கலும் கோமாதா உற்சவமும் யாழ்ப்பாணம் சத்திர சந்தியில் உள்ள ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்று பின்னர் ஊர்வல பவனியும் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பசுக்கள், இடபங்களின் பாதுகாப்பு இணையத்தின் அமைப்பாளர் ம.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் , யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன், சர்வமத தலைவர்கள், புத்திஜீவிகள், கல்வியாளர்கள், சானாறோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இவ் ஊர்வல பவனியானது கே.கே.ஏஸ் வீதியூடாக வந்து, பெரிய கடை வீதியூடாக வலம் வந்து, வைத்தியசாலை வீதியூடாக வந்து மீண்டும் யாழ்ப்பாணம் சத்திர சந்தியில் உள்ள ஞான வைரவர் தேவஸ்தானத்தை வந்தடைந்தது.

இதில் சமய கலாசார சிந்தனை சிறப்புரைகளும், பசுவதைக்கு ஏதிரான விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கும் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *