கல்வியியல் கல்லூரிகளில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை…! கல்வி அமைச்சர்…!samugammedia

கல்வியியல் கல்லூரிகளில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பயிர்ச்செய்கைகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி அமைச்சுக்கு சொந்தமான 19 கல்வியியல் கல்லூரி வளாகங்களிலும் இடவசதி இருக்கும் வகையில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பயிர்ச்செய்கைகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிகவும் குளிரான காலநிலை உள்ள நாடுகளில் உள்ள மக்கள் பனிப்பொழிவு இல்லாத ஆறு மாதங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளின் தாழ்வாரங்களில் கூட தொட்டிகளில் சாகுபடி செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியின் கீழ் நாட்டின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் சூழலில், அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் எதிர்காலத்தை வெற்றிகொள்வதற்கு சரியான முறையில் தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply