மலையகத்தில் பிரமாண்டமாக ஆரம்பமான தேசிய தைப்பொங்கல் விழா – தென்னிந்திய நடிகைகளும் பங்கேற்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் தற்போது கோலாகலமாக  இடம்பெற்று வருகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் விழா இடம்பெற்று வருகின்றது. 

இதன்போது, அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ்  உள்ளிட்ட  அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். 

இதேவேளை தென்னிந்திய நடிகைகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

பாரம்பரிய நடனங்கள், கலை கலாசார நிகழ்வுகளுடன் பொங்கல் பொங்கும் இந்த நிகழ்வு இடம்பெற்றமை  குறிப்பிடத்கத்கது. 

Leave a Reply