நாளை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம்….!அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்…!samugammedia

நாளை காலை 8மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை இந்த வேலை நிறுத்தத்திற்கு செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

நாளை காலை கூடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு,  இந்த தொழில்சார் நடவடிக்கைகளின் எதிர்கால திட்டம் குறித்து கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply