தம்புளை – கண்டலம பிரேதசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் உயிரிழந்த நபர் மதுபானம் அருந்தி விட்டு பாதையில் சென்றபோது காட்டு யானையால் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கண்டலம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.