மரமொன்றில் தொங்கிய நிலையில் மனித எலும்புக்கூடு – பதுளையில் சம்பவம்

பதுளை கொஹோவில கிரிகல்பொத்த காட்டில் தூக்கில் தொங்கியதாக சந்தேகிக்கப்படும் நபரின் உடல் பாகங்கள் நேற்றையதினம்  (28) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர்.

கழுத்தை நெரித்து இறந்ததாக சந்தேகிக்கப்படும் 40 வயதுடைய நபர், சொரனாதோட்டை, கெடிகஹதன்ன, கொஹோவிலவில் வசிக்கும்   தினேஷ் ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 28ஆம் திகதி மதியம் அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் காட்டுப்பகுதிக்குள் சென்ற போது மரத்தில் சடலம் ஒன்றின் பாகங்கள் தூக்கில் தொங்குவதை கண்டு கந்தேகெதர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் திகதி வேலைக்கு செல்வதாக கூறி துணிப்பையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் அதன் பிறகு குடும்பத்தினரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.வீட்டின் துணிகளை காய வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த கம்பியின் ஒரு பகுதியே கழுத்தை நெரிப்பதற்காக   பயன்படுத்தியமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது 

Leave a Reply