புதிய படைக்கல சேவிதரிடம் செங்கோல் கையளிப்பு!

ஓய்வுபெறுகின்ற நாடாளுமனற படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோவினால் அடுத்துவரும் படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் நாடாளுமன்ற சபை மண்டபத்தின் வெள்ளிக் கதவுக்கு அருகில் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெனாண்டோ 42 வருடங்கள் சேவையாற்றி இன்று ஓய்வுபெறவுள்ளதால் அடுத்துவரும் படைக்கலச் சேவிதருக்கு செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் இவ்வாறு சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் 6ஆவது படைக்கலச் சேவிதர் நரேந்திர நரேந்திர பெனாண்டோ, 2018 ஆம் ஆண்டு தொடக்கம் படைக்கலச் சேவிதராக சேவையாற்றியுள்ளார்.

அதற்கமைய நாடாளுமன்றத்தின் 7ஆவது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன நாளை பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply