இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்..! சுகாதாரத்துறை எச்சரிக்கை

 

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்களை  அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

 விவசாயிகளுக்கே  எலிக்காய்ச்சல்  அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அவதானமாக செயற்படவேண்டும்.

காய்ச்சல், தசைகளில் கடமையான வலி, கண் விழி சிவப்பு நிறம் அடைதல், சிறுநீர் வெளியேற்றம் குறைவடைதல், சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல் ஆகியன எலிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

எனவே, எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிக்கிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், கொதித்தாறிய நீரையே பருக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply