ஆசனங்களை சூடாக்கிக் கொண்டிருக்காமல் வேலை செய்யுங்கள்…! அதிகாரிகளுக்கு அட்வைஸ்…!samugammedia

அதிகாரிகள் ஆசனங்களை சூடாக்கிக் கொண்டிருக்காமல் தமது கடமைகளை முன்னெடுக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி  தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் நிறுவனத்தில் நேற்று (29) நடைபெற்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
கடந்த வருடம் மாவட்ட மட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் இவ்வருட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் இலக்குகள் மற்றும் வீட்டுத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி மேலும் தெரிவிக்கையில்,
 
“தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையைச் சேர்ந்த சில அதிகாரிகள் மற்றவர்களின் காணிகளில் வீடுகளை நிர்மாணித்துள்ளனர். தற்போது அந்த அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர். அப்போது, இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாம் தான் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். டொரிங்டன் வீட்டுத் திட்டத்திற்கும் இதைப் போன்றுதான்  செய்துள்ளது.
இப்போது அந்த ஆட்கள் ஒரு கோடியே எண்பது இலட்சங்களை கேட்கிறார்கள். அதை செலுத்த நாங்கள் பணிப்பாளர் சபையின் அனுமதியை வழங்குவோம். இன்றைக்கு ஏன் அந்தத் தொகையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்? ஏனெனில் அந்த அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாக செய்யவில்லை. அவர்களிடம் சோதனைகள், அவதானிப்புகள், சுற்றறிக்கைகள் எதுவும் இல்லை.
டொரிங்டன் வீடமைப்புத் திட்டத்தில் பணம் செலுத்தி வீடுகளை வாங்கியவர்களிடம் இன்னமும் வீட்டுரிமைப்  பத்திரங்கள் இல்லை. வீட்டுரிமைப் பத்திரங்களை பெற வரும் போது தான் இந்த பிரச்சினை குறித்து மக்களுக்கு தெரிய வருகிறது. இதுபோன்ற விஷயங்களுக்கு மனு கொடுக்க யாரும் இல்லை. வேலைக்குப் போகும்போது எத்தனை மனுக்கள் அடிப்பார்கள்?   
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் சொத்துக்களின் பகுதி நடைமுறை சாத்தியமான வகையில் செயல்பட  வேண்டும்.
அதேபோல் நடைமுறிக்குச் சாத்தியமான முடிவுகளை எடுக்க வேண்டும். சிலர் அதிகார சபைக்கு இலாபம் கிடைக்கக்கூடியவாறான வேலைகள் நடக்கும் பொழுது சுற்றறிக்கைகளை வெளியே எடுக்கிறார்கள். ஆனால் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும் பொழுது எந்த சுற்றறிக்கையும் இல்லை.
நிறுவனத்தின் நிர்வாக செயறபாடுகளின் போது எவ்வளவு முறைகேடுகள் நடைபெறுகின்றது. இந்த வேலையில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆசனங்களை சூடாக்கி சூடாக்கி மட்டும் இருக்க வேண்டாம். அதிகாரிகள் முடிவுகளை எடுங்கள். இந்த வருடத்தில் இருந்து கடன்களை அறவிடும் இலக்கு 85% என்ற இலக்கை கட்டாயமாக அடைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *