சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பிரிவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நட்சத்திர ஜோடிகள்
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம்வரும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் நடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
சூர்யா ஜோதிகா இருவரும் காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்பு ஜோதிகா குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டு நடிப்பில் இருந்து விலகி இருந்தார். பின்பு நீண்ட இடைவேளைக்கு பின்பு நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.
சூர்யா சிவா இயக்கத்தில் கஞ்குவா படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கின்றது. இதே போன்று ஜோதிகாவும் பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இவ்வாறு தங்களது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இந்த ஜோடிகள் பிரிந்து விட்டதாகவும், தனித்தனியாக வாழ்ந்துவருவதாக தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா ஜோதிகா பிரிவா?
நடிகை ஜோதிகா அண்மையில் மகன், மகளை அழைத்துக் கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். படங்களில் நடிப்பது தொடர்பாக சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியாக சென்றுள்ளார் என்று கூறப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் விவாகரத்து குறித்து ஜோதிகா கூறுகையில், இந்தி படங்களில் நான் பிஸியாக இருப்பதால் மும்பைக்கு வந்துள்ளதாகவும், நான் மும்பையிலும், பிள்ளைகள் சென்னையிலும் இருந்தால் அவர்களின் படிப்பிற்கு சரிபட்டு வராது என்றும் தற்போது பிள்ளைகள் தன்னுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றனர், மும்பையில் அனைத்து வேலைகளும் முடிந்த பின்பு சென்னை திரும்பிவிடுவதாக கூறியுள்ளார்.
இதனிடையே சமீபத்தில் தனது கணவர் சூர்யாவுடன் பின்லாந்துக்கு புத்தாண்டு விடுமுறையை கொண்டாட சென்ற நிலையில் அங்கிருந்து எடுத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், குறித்த காணொளி மூலம் விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
The post நட்சத்திர தம்பதிகள் பிரிகின்றனரா? appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.