எரிபொருள் விலைகளில் மாற்றம்….! போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிப்பு? samugammedia

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்,  நாட்டில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, 92 ரக பெற்றோல் 05 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

டீசல் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலையும் 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 262 ரூபாவாகும்.

இதேவேளை, லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ரகத்தின் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.

அத்துடன் லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் விலை 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.

இந்த விலைகளுக்கு ஏற்ப லங்கா ஐஓசி தனது எரிபொருள் விலையையும் திருத்தியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில்,  பஸ்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஒட்டோ டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பஸ் உரிமையாளர் சங்கம் இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை.

அதேவேளை முச்சக்கரவண்டி கட்டணங்கள் தொடர்பிலும் எவ்வித அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply