தனிநபர் முத்திரைகள் வெளியீடு தொடர்பில் அறிவிப்பு….!samugammedia

இலங்கை அஞ்சல் திணைக்களத்தால் தனிநபர் முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில்,  ஒவ்வொரு தனிநபரும், பிறந்தநாள், நினைவு தினங்கள் , திருமண நாள் உள்ளிட்ட நினைவுகளை நினைவுகூறும் முகமாக  முத்திரைகளை அச்சிட்டு பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர் எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச் சேவையானது தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, எந்தவொரு தனி நபரும் இச் சேவையினை பெற முடியும் என்பதுடன்  இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட எந்தவொரு படத்தையும் முத்திரையாக வெளியிடலாம் எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக பிறந்தநாள் மற்றும் நினைவு தினங்கள் ,முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் என்பவற்றை முத்திரையாக வெளியிடலாம்.
அவ்வாறு முத்திரை வெளியிட விரும்புபவர்கள், யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலகத்தில்  உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதுடன்  முத்திரையில் காட்சிப்படுத்தப்பட வேண்டிய படத்தினையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அச்சிடப்படும் முத்திரைகள் நாடளாவிய ரீதியிலான அஞ்சல் சேவைக்குப் பயன்படுத்த முடியும். 
25 ரூபா பெறுமதியான 20 முத்திரைத் தாள்களுக்கான கட்டணமாக 2 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி அந்தத் தாளைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *