
கிழக்கு மாகாணத்திலுள்ள ஐந்து அமைச்சுகளிலும் எந்தவொரு அமைச்சுக்கும் முஸ்லிம்கள் செயலாளராக இல்லை. அத்தோடு, கடந்த காலங்களில் அரச நியமனங்களின்போது பின்பற்றப்பட்ட இனச்சமநிலை புறந்தள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றம் சுமத்தினார்.