பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இவர் கடந்த 29ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 2 வர்த்தமானி அறிவித்தல்களும் நேற்று வெள்ளிக்கிழமை (2) அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.
முதலாவது வர்த்தமானி அறிவித்தலில் படி அமைச்சர் லொஹான் ரத்வத்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.