சதொச சீனி விநியோகஸ்தர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 5,000 டொன் சீனி, கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருப்பதே, நாட்டில் சீனியின் விலை அதிகரிப்புக்கு காரணமென, சதொச நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே சதொச தலையிட்டு குறித்த சீனித் தொகையை துறைமுகத்திலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சதொச நிறுவனத்தின் பிரதான அதிகாரியால் தாமத கட்டணம் செலுத்திய ஏற்பட்ட தாமதமே, தற்போது பிரச்சினையாய் மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த சினி தொகையை நாளை அல்லது நாளை மறுதினம் விடுவிக்க எதிர்பார்ப்பதாகவும் சதொச நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த வாரத்திலிருந்து மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள் செயற்கையான வகையில் சீனிக்குத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரித்திருப்பதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான வர்த்தகர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 2003ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தற்காலத்திற்குப் பொருத்தமான வகையில் மறுசீரமைக்கப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கூறினார்.
அத்தோடு நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த அடுத்த வாரத்தில் இருந்து மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கூறினார்