புத்தளம் கற்பிட்டி பிரதான வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!! 7 பேர் காயம்..!! samugammedia

புத்தளம் கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டிப் பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

புத்தளத்தில்  இடம்பெற்ற சுதந்திரத் தின நிகழ்வைப் பார்த்து விட்டு முச்சக்கர வண்டியில் திரும்பிச் செல்லும் போது கற்பிட்டி பகுதியிலிருந்து வருகைத் தந்த முச்சக்கர வண்டியுடன் மோதூண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது கற்பிட்டியிலிருந்து முச்சக்கர வண்டியில் பின் புறத்தில் அமர்ந்திருந்த ஐந்து பேரில் ஒருவர்  ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும்  இரண்டு முச்சக்கர வண்டிகளிலும் பயணித்த ஏழு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கற்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஆறு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 67 வயதுடைய கற்பிட்டி மண்டலக்குடாப் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட விபத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.

Leave a Reply