16 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 32 வயது காதலனும், முதியவரும் கைது!

அநுராதபுரம் – நொச்சியாகம பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 32 வயதுடைய காதலனும் 51 வயதுடைய முதியவருமாவர். 

பாதிக்கப்பட்ட சிறுமி  தனது பாட்டி சுகயீனமடைந்ததன் காரணமாக அவரது  வீட்டுக்கு தங்குவதற்காக சென்றிருந்த நிலையில் 32 வயது இளைஞருடன் காதல் தொடர்பை பேணியுள்ளார்.

இந்த காதல் தொடர்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் பாட்டி சிறுமியை அடித்துள்ளார். 

இதனையடுத்து குறித்த சிறுமி தனது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு கடந்த  முதலாம் திகதி தனது காதலனின் வீட்டுக்குச் செல்வதற்காக புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் இருந்த 51 வயதுடைய முதியவர் ஒருவர் சிறுமியிடம் இரவில் பயணிக்க வேண்டாம் என்றும் காலை வரும் வரை தனது வீட்டில் தங்கியிருக்குமாறும் கூறி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து 51 வயதுடைய சந்தேக நபரான முதியவர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது 14 ஆவது பிறந்த தினத்தன்று தனது காதலனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர்களான இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply