ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு…! சுதந்திர கட்சியின் நிலைப்பாடு வெளியானது…! samugammedia

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இவை பொய்யான தகவல்களே. சுதந்திரக்கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் அரசியல் கூட்டணியானது நாட்டின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானகரமான வலுவான கூட்டணியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply