நாட்டு மக்களுக்கு நாங்கள் இரண்டு தவறுகளை செய்தோம், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்த கூட்டத் தொடரின் ஆரம்ப கூட்டம் நேற்று பொலனறுவை கிரித்தலே பிரதேசத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டின் பிள்ளைகளுக்காக, இந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்திற்காக ஒரு நல்ல நாட்டை கட்டியெழுப்பவே இந்த கட்சி உருவாக்கப்பட்டது.
அதற்காக பொதுஜன பெரமுன சிறந்த முறையில் வெற்றி பெறுவதற்கான அதிகபட்ச சக்தியை வழங்கியது. ஆனால் அதிகாரத்தை காப்பாற்ற தலைவர்களால் முடியவில்லை.
நாட்டு மக்களுக்கு நாங்கள் இரண்டு தவறுகளை செய்தோம், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
ஒன்று, கொரோனா வைரஸின் போது நாடு மூடப்பட்டது, ஆனால் அது இந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க செய்யப்பட்டது. இந்நாட்டு மக்கள் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தவறுகளையே செய்துள்ளோம். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
எனவே பொதுஜன பெரமுனவை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்.
அடுத்த அதிபர் தேர்தலில் எமது கட்சியின் வேட்பாளரை அதிபர் வேட்பாளராக முன்வைப்போம்.
எனவே இந்த நாட்டை கட்டியெழுப்ப எமது தலைவர்களில் ஒருவரை நியமித்து ஒன்றிணைந்து செயற்படுவோம். என்றார்.