வேலைத்தளத்தில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்…!samugammedia

வேலைத்தளத்தில் கடமையில் ஈடுபட்டபோது இரும்பு தலையில் விழுந்து படுகாயமடைந்த குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இரும்பு தலையில் விழுந்தது படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட குறித்த குடும்பஸ்தர், மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை இன்றையதினம்  கண்டி போதனா வைத்திய சாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply