சொந்த பிள்ளைகளையே கொடூரமாக தாக்கி வீடியோ வெளியிட்ட கொடூர தந்தை..!

 

  

ஹட்டன் – திம்புள்ள – பத்தனை பகுதியைச் சேர்ந்த தந்தை ஒருவர் தமது இரண்டு பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தி அதனை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமது தாய் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் குறித்த சிறுவர்கள் பத்தனை பகுதியில் உள்ள தமது பாட்டனாரின் பராமரிப்பில் இருந்துள்ளனர்.

இதன்போது, கடந்த 5 ஆம் திகதி குறித்த சிறுவர்களின் தந்தை, அவர்களை தாக்கியதுடன், அதனை ஒளிப்பதிவுசெய்து, 

காணொளியை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, லிந்துலை, நாகசேனை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 

மேலதிக விசாரணைகளுக்காக அவர் திம்புள்ள – பத்தன காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply