யாழில் வயலாக மாற்றப்பட்ட தரிசு நில காணியில் பொதுமக்களால் நெல் அறுவடை…!samugammedia

சுழிபுரம் மேற்கு திருவடிநிலை பகுதியில்  நெல்வயலாக மாற்றப்பட்ட தரிசு நில காணியில் பொதுமக்களால்  இன்று நெல் அறுவடை மேற்கொள்ளபட்டது 

சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு திருவடிநிலை மீள் குடியேற்ற பகுதியில் உள்ள காணியில் 60ஏக்கர் தரிசு நிலக்காணி சழிபுரம்மேற்கு வாழ் பொதுமக்கள் ,புலம்பெயர் தேசத்தவர்கள் ,கலைமகள் விளையாட்டு கழகத்தினரால் பசுமை புரட்சி திட்டத்தின் கீழ்  அபிவிருத்தி செய்யப்பட்டது.

தொடர்ச்சியாக குறித்த காணியின் 62 பரப்பு நெல்வயலாக மாற்றப்பட்ட நிலையில்  இன்றைய தினம் அறுவடை முன்னெடுக்கப்பட்டது.

முன்னெடுக்கபட்ட அறுவடைமூலம் பெறப்பட்ட நெல்லினை விற்பனை செய்து தொடர்ச்சியாக சமூக பணிகளை முன்னெடுக்கவுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்க்கும் முகமாக குறித்த நிலப்பரப்பு விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக குறித்த பகுதியில் அமைந்துள் கடல் நீர் ஏரி வாய்க்காலில் நன்னீர் மீன்பிடி திட்டத்தினையும் ,வேறு பயிர்ச் செய்கைகளையும் பிரதேசவாசிகள் முன்னெடுக்கவுள்ளனர்.

எந்த ஒரு அரசியல் ,அரச அதிகாரிகளின் ஆதரவின்றியும்  பொதுமக்களால் தன்னார்வ ரீதியாக குறித்த பசுமை புரட்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய குறித்த அறுவடை விழாவில் புலம்பெயர் தேச உறவுகள் சார்பில் முத்தையா ஞானவேல் ,வனிதா ரவீந்திரன்,பசுமை புரட்சி திட்ட குழுவினர்களான நாராயணன் சபாரத்தினம்,சைலசுதா, சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தினர்,பொதுமக்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply