ரணில், பொன்சேகா இரகசிய சந்திப்பு: பரபரப்பாகும் கொழும்பு அரசியல் அரங்கு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான  சந்திப்பொன்று நேற்றையதினம் (7)நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள ஜனாதிபதி ;அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தின் புதிய அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய கொள்கை உரையின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதிக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு சுமார் இருபது நிமிடங்கள் நீடித்ததுடன் அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.

Leave a Reply