யானை–மனித மோதலைத் தடுக்க வேண்டும்!

”யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக” நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் தெரிவித்தார்.

நீண்ட காலமாக நிலவி வரும் யானை – மனித மோதல் தொடர்பாக நேற்றிரவு நீதிக்கான மய்யத்தின் சாய்ந்தமருது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசமானது யானைகள் வாழ்கின்ற பிராந்தியம் அல்ல. வெளிமாவட்டங்களில் இருந்து யானைகள் இங்கு கொண்டுவரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த 5 வருடங்களில் யானைகளின் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கிழக்கு மாகாணம் இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றது. இந்நிலையில் இதற்கு தீர்வு வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply