இறங்குதுறைப் பிரச்சனை குறித்து ஆளுநருடன் விசேட சந்திப்பு!

 

தமது இறங்குதுறைப் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்று தருமாறு கோரி யாழ்.சாவல்கட்டு மீனவர்கள் இன்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சரிடம் கலந்துரையாடி சரியான தீர்வை பெற்றுத்தருவதாக ஆளுநர் தமக்கு உறுதியளித்துள்ளதாக மீனவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தமது இறங்குதுறைப் பிரச்சனைக்குத் தீர்வு கோரி சாவல்கட்டு மீனவர்கள் கடந்த 06 ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply