பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த அதிசொகுசு கப்பல்..!

பிரான்ஸில் இருந்து லீ ஜெகியுஷ் (Le Jacques) என்ற அதிசொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் இன்று காலை முதல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

130 சுற்றுலாப்பயணிகள் மற்றும் 120 பணியாளர்களுடன் குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பல் ஊடாக நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணிக்கவுள்ளனர்.

Leave a Reply