நாடு திரும்பும் பஸில்…! ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விரைவில் இறுதி முடிவு…! மொட்டு கட்சி அறிவிப்பு…!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என அக் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவில் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்னும் ஓரிரு நாள்களில் நாடு திரும்புவார். அதன்பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று பொதுஜன பெரமுனக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

“கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் இறுதித் தறுவாயிலேயே ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்டோம். வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான பலம் எமது கட்சியிடம் இன்னும் உள்ளது. 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பலர் போட்டியிடவுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஐந்தாறு மாதங்கள் உள்ளன.

எனினும்,அதுவரை காத்திருக்கமாட்டோம் எனவும் இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply