ஆலோசனை சபையின் நியமனம் அரசின் கண்துடைப்பு நாடகம் – சிவாஜிலிங்கம்

தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் ஆலோசனை சபையின் நியமனம் என்பது, ஐநா கூட்டத்தொடருக்கான வெறும் கண்துடைப்பு நாடகம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய விஷேட செவியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.,

பயங்கரவாத தடை சட்டம் 1979-ம் ஆண்டில் 48-வது இலக்க சட்டமானது, இந்த சட்டத்தில் மரண தண்டனை இருக்காது ஆயுள் தண்டனை மட்டுமே இருக்கும் என அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆட்சிகாலத்தில் நீதி அமைச்சராக இருந்த தேவநாயகம் அவர்களால் மரண தண்டனை இருக்காது, 20 வருட கடூழிய சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்படுமென சொல்லப்பட்டது.

மேலும் இந்த சட்டத்தில் மரண தண்டனை இருக்காது சொல்லப்பட்டதை 1992-ஆம் ஆண்டு கைதிகளாக இருந்த குட்டிமணி மற்றும் ஜெகன் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்தே அவரின் வாக்குறுதி மீறப்பட்டது.

அப்போதுதான் தமிழ் தலைவர்கள் திடுக்கிட்டார்கள்.இதேபோல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் காலி மாவட்டத்திலுள்ள பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்போது, இந்த ஆலோசனை சபை ஊடாக சட்டத்தரணிகள் முன்னிலையாகி அவர்களுக்காக வாதிடும் வாய்ப்பு இருந்த நிலையில் கடந்த இருவது வருடங்களாக இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த நிலையில் இப்பொழுது மீண்டும் அதை சொல்ல ஆரம்பித்துள்ளார்கள், இது சர்வதேசத்தை ஏமாற்றும் செயற்பாடு, வரும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரை இலக்கு வைத்து அதிலிருந்து தப்பித்து கொள்வதற்கான வழியாகவே இதனை பார்க்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான விஷேட செவி இதோ..

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *