வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.4 வீத அதிகரிப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தனது X கணக்கில் வெளியிட்ட பதிவொன்றிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பெப்ரவரி மாதம் முதல் 8 நாட்களில் 60,122 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை வந்துள்ளனர்.
இதன்படி இந்த ஆண்டு இதுவரை 268,375 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.