மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் ரயில் மோதிப் பலி – திருமலை- தம்பலகாமம் பகுதியில் சோகம்..!!

திருகோணமலை-தம்பலகாமம்  பகுதியில் ரயிலுடன் மோதி 14 வயதுடைய சிறுவன்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முள்ளிப்பொத்தானை யூனிட்-07 பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய  நளீம் முஹம்மது சப்ரிட் என்ற மாணவனே உயரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், குறித்த சிறுவன், தம்பலகாமம் பகுதியிலுள்ள பாலத்துக்கு அருகில் சக நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளார், 

அந்தசமயம் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த  ரயிலுடன் மோதியதாகவும் தெரிய வருகின்றது. 

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply