மடுவில் விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைப்பு..! மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள் – இருவர் கைது

மடு, பண்டிவிரிச்சான் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின்  சுற்றிவளைப்பின் போது இன்று   இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மடு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, மடுகந்தைப் பகுதியில் உள்ள விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பண்டிவிரிச்சான் பிரதேசத்தில் திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, காட்டுப் பகுதியில் 1000 லீட்டர் கோடா மற்றும் 35 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், மீட்கப்பட்ட பொருட்களுடன் மடு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரகைளை மடுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply