தென் கொரியாவில் இருந்து இலங்கை வந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு – தவிக்கும் மனைவி..!

 

பல வருடங்களாக தென் கொரியாவில் பணிபுரிந்து வந்த குடும்பஸ்தர் இலங்கைக்கு வந்த நிலையில் மீண்டும் அங்கு செல்ல தயாராக இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கம்பளை போவல, பலதொர பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இளம் வர்த்தகரான மகேஷ் சமரநாயக்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் திருமணமான அவர் கொரியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கையில் இயந்திரங்கள் மூலம் மரம் வெட்டும் தொழில் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். இதன்போது மரம் ஒன்றை வெட்டும் போது அது அவர் மீது விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தலையில் அடிபட்ட நிலையில் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அவரும் அவரது மனைவியும் கொரிய பரீட்சையில் சித்தியடைந்து மீண்டும் கொரியா செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது இந்த அசம்பாவித சம்பவத்தை எதிர்கொண்டனர்.

பிரேத பரிசோதனையை மேற்கொண்ட கம்பளை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அமிலதா மரம் விழுந்ததில் தலை மற்றும் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *