வைத்தியசாலைகளில் களமிறக்கப்படும் 1100 இராணுவ வீரர்கள்..! எடுக்கப்பட்ட நடவடிக்கை

சுகாதார பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேலும் 1100 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அதன்படி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியசாலைகளின் 72 சுகாதார சங்கங்கள் நேற்று  வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்

மேலும் இரண்டாவது நாளாகவும் இன்றும் மேற்கொள்ளப்பட்டமையால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியதால் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனின் பணிப்புரையின் பேரில் இப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply