விராட் கோலியை முந்தி சாதனையை பதிவு செய்தார் பெத்தும் நிஸ்ஸங்க..!samugammedia

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க, புதிய சாதனையொன்றை பதிவுசெய்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி சார்பில் அதிவேகமாக இரண்டாயிரம் ஓட்டங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் பெத்தும் நிஸங்க முதலிடத்தை பிடித்துள்ளார்.

25 வயதான இவர், 52 இன்னிங்சுகளில் இரண்டாயிரம் ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளார். ஆனால், விராட் கோஹ்லி 53 இன்னிங்சுகளிலேயே இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்திருந்தார்.

இதற்கு முன்னதாக, இலங்கை அணி சார்பில், உபுல் தரங்க 63 இன்னிங்சுகளில் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்ததே சாதனையாக இருந்தது. ஆனால், தற்போது அந்த சாதனையை  நிஸ்ஸங்க முறியடித்துள்ளார்.

எனினும், இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் சுப்மான் கில் 38 இன்னிங்சுகளில் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்ததே ஒட்டுமொத்த சாதனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply