நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் – ரணிலுக்கு குவியும் ஆதரவு..!samugammedia

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், 

நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த போது நாட்டைக் கைப்பற்றுவதற்கு எந்தத் தலைவரும் முன்வரவில்லை.  அந்த வேளையில் ரணில் விக்ரமசிங்க முன் வந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ” இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. இது நான்   பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் முடிவு அல்ல. எங்கள் கட்சியில் இருந்து ஒரு வேட்பாளரை முன்வைப்பதா அல்லது வேறு வேட்பாளருடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து எங்கள் கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை. எனவே நாட்டைப் பற்றி சிந்தித்து செயலாற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எனது ஆதரவை வழங்குகின்றேன் ” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply