இலங்கையில் களமிறங்கவுள்ள ஆயிரக்கணக்கான சீனர்கள்..!

 

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் சீனர்களுக்காக மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக 2000-3000க்கும் மேற்பட்ட சீன விளையாட்டு வீரர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த ஆண்டு மே மாதம் 1ம் திகதி முதல் 3ம் திகதி வரை இந்த மரதன் ஓட்டப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து உனவட்டுனா கடற்கரைப் பகுதியில் கடல் உணவு திருவிழாவும் நடத்தப்படவுள்ளது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாஹு இதனை வருடாந்த நிகழ்வாக மாற்றுவதற்கான திட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த திட்டத்தினால் இலங்கைக்கு ரூ.225 பில்லியன் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply