இந்திய தூதரக அதிகாரிகள் யாழ் காங்கேசன் துறைமுகத்திற்கு திடீர் விஜயம்…!samugammedia

இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா இன்றையதினம்(16) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு வருகின்றார். 

அந்த வகையில் யாழ் வலி வடக்கு காங்கேசன் துறைமுகத்தினை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply