தகுதி வாய்ந்த அதிபரை நியமித்து தருமாறு கோரி திருமலையில் பெற்றோர்கள் போராட்டம்…!samugammedia

தகுதி வாய்ந்த அதிபர் ஒருவரை நியமித்து தருமாறு கோரி திருகோணமலை, கிண்ணியா இஹ்ஸானியா வித்தியாலய பெற்றார்கள் மற்றும் நலன்விரும்பிகள் இன்றையதினம்(16) பாடசாலையின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

13 வருடங்களுக்கு மேலாக மாணவியர்களினது கற்றல் கற்பித்தல் நடவடிக்கை வருடத்திற்கு வருடம் சீரற்று காணப்படுகின்றது. 

அத்துடன் மாணவிகளின் இணைப்பாடவிதான செயற்பாடுகளும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதையும் பெற்றோர் மற்றும்  நலன் விரும்பிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, பாடசாலைக்கு நியமனம் பெற்றுவந்த அதிபரை உடனடியாக நிரந்தரமாக்கி தருமாறு பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply