திடீரென மயங்கி விழுந்த 4 மாணவர்கள்..! ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்..! விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

 

இப்பாகமுவ பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 4 மாணவர்கள் மரத்தடியல் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தரம் 5 மாணவர்கள் 4 பேர் நேற்று (16) கல்லூரியில் உள்ள மரத்தின் கீழ் மயங்கி விழுந்த நிலையில் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நான்கு மாணவர்களும் மரத்தடியிலிருந்து ஏதோ மாத்திரைகளை உட்கொண்டதாக அங்கிருந்த எனைய மாணவர்கள் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த மாத்திரைகளை யாராவது இவர்களுக்குக் கொடுத்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply