வவுனியாவில் விபத்து…! பேருந்து சாரதி மற்றும் நடத்துநர் பிணையில் விடுதலை…!

வவுனியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பேருந்து சாரதி மற்றும் நடத்துநர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த மாதம் இருபதாம் திகதி திருகோணமலை வவுனியா குஞ்சோத்து சந்தி அருகில் அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினால் மோதி ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பேருந்து சாரதி மற்றும் நடத்துநரை,  தலா 1 லட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல கெப்பிட்டிகோல்லாவ நீதவானும் மாவட்ட நீதிபதியுமான அசு காஞ்சன அனுமதி அளித்தார்.
 

Leave a Reply