இன்று முதல் தினமும் 10 இலட்சம் முட்டைகள் விநியோகம்…!

லங்கா சதொச நிறுவனத்திற்கு இன்று முதல் தினமும் 10 இலட்சம் முட்டைகள் விநியோகிக்கப்படும் எனவும் சந்தைக்கு அதிகபட்சமாக முட்டை விநியோகம் செய்யப்பட்டாலும் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாத காரணிகள் இருப்பதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தண்டை முன்னிட்டு,  அத்தியாவசிய பொருட்கள் பலவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டில் தற்போது டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

Leave a Reply