யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் வீதியில் உள்ள அரியாலை ரயில்வே அருகே மோட்டார் ஷெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை 10.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
அத்தோடு மோட்டார் ஷெல் எனபொதுமக்களால் இனங்காணப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதனையடுத்து விரைந்து வந்த பொலிசார் அதனை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்க்கது.





